பூண்டி ஒன்றியம் சென்றான்பாளையம் கலம் இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 10ம் வகுப்பு தேர்வில், தேர்வு எழுதிய மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்கள் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேலும், 60 சதவீத மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பள்ளித் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
Share To:

Qalam Group Of Instituions

Excellence in Education and Character

Post A Comment: